மும்பை:

அதிக லாபம் ஈட்டித்தந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தை பெரும் கடனாளியாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசுக்கு அதிக லாபம் ஈட்டித்தரும் நிறுவனமாக இருந்தது.

இந்த நிலைமை எல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தலைகீழாக மாறி விட்டது

பொது நிறுவனமான ஓஎன்ஜிசி கடந்த 1950 மற்றும் 1960 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்தது.

இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு பக்கபலமாகவும் பாதுகாப்பாகவும் இந்த நிறுவனம் இருந்தது.

1990 ஆண்டில் பூமிக்கு அடியில் எண்ணெய் வளத்தை கண்டறியும் பணியை தனியார் நிறுவனங்களிடம் அப்போதைய காங்கிரஸ் அரசு ஒப்படைத்தது.

அதன்படி, பூமியிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டது.

இதன் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனம் லாபம் ஈட்டியது. 1992- 93 – ம் ஆண்டில் 28 இடங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்கள் அமைக்கப்பட்டன.

1991 – ம் ஆண்டு உலக வங்கியிடம் 450 மில்லியன் டாலர் கடன் பெற ஓஎன்ஜிசி நிறுவனத்தை மத்திய அரசு நிர்பந்தித்தது.

இதற்காக ஓஎன்ஜிசி கட்டுப்பாட்டிலிருந்த எண்ணெய் வயல்கள் உலக வங்கியிடம் அடமானமாக வைக்கப்பட்டன.

அப்போதும் ஓஎன்ஜிசி தொடர்ந்து இந்தியாவின் பணக்கார நிறுவனமாக திகழ்ந்தது. உள்ளூர் உற்பத்தியின் 70 % தேவையை ஓஎன்ஜிசி பூர்த்தி செய்தது.

ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கையால் ஓஎன்ஜிசி கடனாளியாக மாறிவிட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓஎன்ஜிசியின் 60 % பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்க பெட்ரோலியத் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால், அரசின் மற்றொரு எண்ணெய் நிறுவனம் தெரிவித்த கடும் எதிர்ப்பால், பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை அரசு கைவிட்டது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிதி நிலைமை அதன் வருடாந்திர வரவு செலவு அறிக்கையில் பிரதிபலித்தது, கடந்த 4 ஆண்டுகளாக நிதி நிலைமை மோசமாக இருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

நிதி நிலைமை மட்டுமல்லாது, ஓஎன்ஜிசியின் தொடர் வீழ்ச்சியால் நாட்டின் எதிர்கால எரிசக்தி தேவையும் கேள்விக்குறியாகி விட்டது.

கடந்த 2018 மார்ச் இறுதியில் ஓஎன்ஜிசியின் பணம் இருப்பு கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டை ஆண்டை விட 2018-ம் ஆண்டில் பணம் இருப்பு 90% குறைந்துள்ளது.

கடந்த 2014 15 ஆண்டில் மோடி பதவிக்கு வந்து சில மாதங்களில் பல இறப்பு 74% குறைந்தது.

முதலீட்டுச் செலவு, ஹைட்ரோ கார்பன் கண்டறியும் பணிக்கான செலவு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட பணம் பொதுத் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த பணத்திலிருந்து தான் பங்குதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

அதே ஆண்டு ஓஎன்ஜிசி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் சென்றது. அப்போது, தோராய நிகர லாபம் ரூ18,334 அளவுக்கு இருந்தாலும், இந்த நிறுவனம் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

2015 முதல் 2017 வரை பணம் இருப்பு திருப்திகரமாக இருந்தது. அதன்பிறகு பணம் இருப்பு 92% குறைந்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.

பங்குதாரர்களுக்கு அதிக லாபம் தரும் நிறுவனமாக ஓஎன்ஜிசி இருந்தது. அதனால் ஓஎன்ஜிசி நிறுவனத்தை மத்திய அரசு கறவை மாடு ஆக மத்திய அரசு நினைத்தது.

லாபம் தரும் மற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களைப் போல ஓஎன்ஜிசி நிறுவனத்தையும் மத்திய அரசு கையாண்டது.

ஓஎன்ஜிசி மற்றும் ஏனைய எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு மானியத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டன.

இதன்படி எரிவாயு மானியத்தின் ஒரு பகுதியை ஓஎன்ஜிசி ஏற்றுக்கொண்டதால், அந்நிறுவனம் வீழ்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கியது.

தொடர்ந்து எரிவாயு மானியத்தை பகிர்ந்து கொண்டதால் ஓஎன்ஜிசி நிதி நிலைமை அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓஎன்ஜிசி தலைவர் சசி சங்கர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.