Random image

ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: தர்மேந்திர பிரதான்

டில்லி:

ந்திய  ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. தினசரி விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

உலக சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு இல்லாத நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு  தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதை கண்டித்து வரும் 10ந்தேதி நாடு முழுவதும் முழு அடைடப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது :-

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை நோக்கி செல்வதால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட வேண்டும். விலையேற்றத்தால் மக்களின் பிரச்னையை உணர்கிறோம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட்ட பின்னர் அனைவரும் பயனடைவார்கள். கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக ஈரான், வெனிசுலா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் கூறியபோதும் அதை அவர்கள் செய்யவில்லை. இது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.