Random image

எடப்பாடி மீதான லஞ்ச புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது: உயர்நீதி மன்றத்தில் லஞ்சஒழிப்புத்துறை தகவல்

சென்னை:

முதல்வர் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தமிழக முதல்வர்மீது ஊழல் புகார் லஞ்ச ஒழிப்பு துறை யிடம் புகார் மனு கொடுத்திருந்தார். அதில், முதல் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது சம்பந்தி பி.சுப்பிரமணியம், நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோருக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.4,833.57 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளார்.

இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. பொது ஊழியரான எடப்பாடி பழனிசாமி ஆதாயம் அடையும் நோக்கில் இதுபோன்று செயல்பட்டுள்ளார். எனவே, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீதும், தொடர்புடைய மற்றவர்கள் மீதும்  எடுக்க எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, முதல்வர் மீதான புகாரில் 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் பழனிசாமி மீது திமுக அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

விசாரணை குறித்த விரைவு அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் தந்துள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு செப்.7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.