ஆகஸ்டு 5ந்தேதி முதல் சட்டப்படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் …

சென்னை:

கஸ்டு 5ந்தேதி முதல் சட்டப்படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் விநியோகம் தொடங்கும் என்று அம்பேத்கர் சட்டப்பல்கலைக்காகம் அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக  கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில்,தற்போத பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை, தகுதித்தேர்வு, விண்ணப்பம் போன்றவற்றை  பெற்று வருகின்றன.

இந்த ஆண்டு  மாணவர் சேர்க்கை முழுவதும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முதல் கல்லூரிகள் ஒதுக்குவது வரை அனைத்துமே ஆன்லைனில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில், பிளஸ்2 தேர்வு முடிவுகளும் கடந்த மாதம் 15ந்தே வெளியாகின. இதையடுத்து, கல்லூரிகளில் இடம்பிடிக்க மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றன.

ஏற்கனவே   கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சட்டப்படிப்புக்கான விண்ணப்பம் ஆகஸ்டு 5ந்தேதி முதல் ஆன்லைனில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து,  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் சட்டக்கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கு வரும் ஆகஸ்டு  5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில், 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ஆன்லைனிலும், 10 ஆம் தேதி முதல் நேரடியாக விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.4-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

tndalu.ac.in என்ற இணையதளத்தில்  ஐந்தாண்டு சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.