சென்னை:
ன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில்  நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை, தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும்போது, தேவையான,  ஆபாச இணைய தளங்கள் இடையியே தோன்றி பள்ளி மாணவ மாணவிகளின் எண்ணத்தை மாற்றும் வகையில் தூண்டி வருகிறது.
இதையடுத்து,  இதுபோன்ற தேவையற்ற இணையதளங்கள்  மாணவ-மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை  விதிக்க வேண்டும் என்று வழக்குகள் போடப்பட்டு உள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் வரமா? சாபமா?
கடந்த விசாரணையின்போது,  ஆன்லைன் வகுப்புகளால், மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , அரசு கண் மருத்துவமனை டீன் எந்த ஒரு அறிக்கையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதையடுத்து,  மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன் ஜூலை 15ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கை 20ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.