சென்னை: ஆன்லைன் வழிக்கல்வி வகுப்புகள், பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் இல்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆகையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந் நிலையில்,  பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று பள்ளிக்கல்வி ஆணையர் கூறி உள்ளார். மாணவர்களை எந்த காரணம் கொண்டும் ஆன்லைன் வழிக்கல்விக்கு வற்புறுத்தக்கூடாது.

ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகை பதிவேடு அல்லது மதிப்பெண்களையும் கணக்கிடக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.