சென்னை:
ரசு பள்ளிகளில் வருகின்ற திங்கட்கிழமை ( 13ம் தேதி) முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத் தால் அனைத்து கல்வி நிறுவனகளும் மூடப்பட்டு உள்ளன. தற்போது மத்திய மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து உள்ளதால்,  தனியார் கல்வி நிறுவனங்கள்  ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி நடத்தி வருகின்றன. ஆனால், அரசு பள்ளியில், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தொடர்பாக  இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இதற்கு காரணமாக, ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான இணைய வசதியுடன் கூடிய  ஸ்மார்ட் போன் பெரும்பாலான அரசு பள்ளி மாணாக்கர்களிடையே இல்லாத சூழல் உள்ளது.

இந்த நிலையில் அரசு பள்ளிகள் வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறையை தொடங்க இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு பள்ளிகள் திறப்பதற்கு நீண்ட காலம் ஆகும் என்று அவர் கூறிய அமைச்சர் செங்கோட்டையன், தற்போது அரசு பள்ளியிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து வருவதாகவும், வருகிற 13-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணாக்கர்களுக்கு கற்பிக்கப்படும் என்று கூறியவர், இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்
என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறியவர்,  அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 பாடங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.