சென்னை: அரியர் மாணவர்களுக்கு ஜனவரி 6-ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட இருப்பதாக சட்டப் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம், அரியர் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அறிவிக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இதையடுத்து,பல்கலைக்கழகங்கள்,  அரியர் மாணவர்களுக்கு தேர்வுகளை அறிவித்து உள்ளது. இந்தநிலையில், சட்டப்பல்கலைக்கழக அரியர் மாணவர்களின் தேர்வு குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரியர் மாணவர்களின் நலன் கருதி அவர்களின் தேர்வு தேதியை விரைந்து வெளியிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து,  ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,ச ட்ட படிப்புகளுக்கு ஜனவரி 6 ம் தேதி முதல் பருவத் தேர்வுகளோடு சேர்த்து அரியர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படவுள்ளதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.