கேரளாவின் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணிபுரியும் பிந்து என்பவரது ஒருமாத சம்பளப்பணம் ரூ.60,000 ஆன்லைன் திருடர்களால் சாதுரியமாக அவரது கனரா வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பணம் ரூ 20,000 ஆயிரமாக மூன்று முறை மூன்று நிமிடங்களில் கல்கத்தாவை சேர்ந்த ஒரு பேடிஎம் இ-வாலட் கணக்கிற்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து பிந்து சைபர்செல்லிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை விசாரித்த அதிகாரிகள் பணத்தை திருடியவரின் வங்கிக் கணக்கை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
திருடியவரின் வங்கி கணக்கு சரிபார்க்கப்பட்ட வங்கிக்கணக்காக(Verified Account) இருந்தமையால் அதை விரைவாக கண்டுபிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒரு தனி மனிதரால் செய்யப்பட்டதாக இருக்காது. இதற்கு பின்னால் ஒரு பெரிய ஹை-டெக் நெட்வொர்க் இருக்கக்கூடும் என்று அவர்கள் சந்தேகித்துள்ளனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டபோது இதற்கு இன்சூரன்ஸ் இருப்பதால் பணத்தை பறிகொடுத்தவர் கவலைப்பட தேவையில்லை. அவருக்கு பணம் திரும்ப கிடைத்துவிடும். ஆனால் அதற்கு சில காலங்கள் ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர். சிலர் தங்கள் வங்கி கணக்கின் விபரங்களை பின்கோட் உட்பட ஏதாவது தவறான இணைய தளங்களில் கொடுத்துவிடுகின்றனர். அதுவே இதுபோன்ற ஆன்லைன் திடுர்ருகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தான் அதுபோன்று எந்த இடத்திலும் யாரிடமும் தனது வங்கி விபரங்களை பகிர்ந்துகொள்ளவில்லை என்று பணத்தை பறிகொடுத்த பிந்து மறுத்துள்ளார்.
 
An employee of Central University of Kerala lost Rs 60,000 from her bank account, in what appears to be a case of “high tech” online fraud