சென்னை:

மிழகத்தில், அரசு சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை கோவை, ஈரோடு மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவச நீட் பயிற்சி சோதனை முறையில் இன்று தொடங்கப்பட்டது.

மருத்துவக்கல்வி படிக்க நாடு முழுவதும் நீட் எனப்படும் தகுதித்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ‘ஸ்பீடு’ என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து  இலவசமாக நீட் பயிற்சி வழங்கி வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று  சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச நீட் பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது.

தற்போது  சோதனை அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.