சென்னை,

நாளிதழ் மற்றும் வார இதழ்களில் வரும் செய்தியை அப்படியே காப்பி செய்து, வலை தளங்களில் தங்களது பெயரில் பலர் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இதுபோன்ற மோசடிகளை தடுக்க கோரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட மென் பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சில காலமாக பிரபல நாளிதழ்கள், வார இதழ்களின் செய்திகள், எக்ஸ்குளுசிவ் கட்டுரைகள், புகைப்படங்கள் ஆகியவை எந்தவித மாற்றங்களுமில்லாமல் மற்றொரு  செய்தி இணையத்த ளத்தில் அவர்களின் பெயரின் தொடர்ந்து வெளியானது.

இதை அறிந்த அந்த நாளிதழ் நிர்வாகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே   இதுகுறித்து சென்னை  சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில்,  தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த இன்ஜீனியர் ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் திருட்டுத்தனமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட ஆனந்த், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகன் என்றும், இவர் சென்னையில் உள்ள தனியார் இன்ஜீனியரிங் கல்லூரியில் படித்துவிட்டு,  பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

ஐ.டி. நிறுவனம் அவரை  சென்னையிலிருந்து அவரை புனேக்கு வேலை விசயமாக இடம் மாற்றியது. அதைத்தொடர்ந்து,  வேலையை உதறிய ஆனந்த தனியாக இணையதள வடிவமைப்பு (வெப் டிசைன்) செய்து கொடுக்கும் பணியில் இறங்கினார்.

இதில் நல்ல வருமானம் கிடைக்கவே, தனியாக நாளிதழ்களின் செய்திகளை எடுத்து, தனி செய்தி வலைதள செய்தி நிறுவனமே நடத்த தொடங்கி விட்டார்.

மேக்னட் டாட் காம் என்ற இணையத்தளத்தில் முன்னணி செய்தி நிறுவனங்களின் செய்திகள் அப்படியே வாட்டர் மார்க்குவுடன் வெளியாகி வந்தது. இந்த செய்தி நிறுவனத்தை ஆனந்த் நடத்தி வந்தார். இதில் செய்திகள் பார்ப்பதற்கு, விளம்பரம் செய்வதற்கு என பணம் வசூலித்துள்ளார்.

போலீசார்  இணையத்தளத்தின் முகவரி வைத்து, அதை நடத்துபவர் யார் என்ற விசாரணையில் களமிறங்கினார்.  அப்போது, இன்னொரு செய்தி நிறுவனத்தின் செய்திகளை காப்பியடித்த மேக்னெட் டாட் காமிற்கு வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் தூத்துக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி அக்கவுன்ட்டில் வரவு வைக்கப்பட்ட விவரம்  தெரிய வந்தது.

அதில், ஆனந்த் என்ற பெயரிலான அக்கவுண்டுக்கு  லட்சக்கணக்கான ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து ஆனந்த்தை போலீஸார், காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.