ஆன்லைன் மூலம் பேனர் வைக்க அனுமதி வழங்கினால், முறைகேடுகள் மற்றும் விபத்துக்கள் உண்டாகாதவாறு தவிற்க முடியும் என்று தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சிடுவோர் உரிமையாளர் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ், “தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் டிஜிட்டல் பேனர் அச்சிடும் கடைகள் உள்ளன. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் தான்.

பேனர் வைக்க மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட துறைகள், ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கினால் முறைகேடுகள் மற்றும் விபத்துக்கள் உண்டாகாதவாறு தவிர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.