சென்னை: வரும், 17ந்தேதி முதல் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பிராக்டிக்கல் தேர்வுகள் தொடங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள  அறிவிப்பு மற்றும்,   வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளதாவது,

பொறியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 17ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும்.

இந்த செய்முறைத் தேர்வுகள் ஆன்லைன் வழியில் 3 மணி நேரம் நடக்கும். ஆன்லைன் மூலம் தேர்வுகள்  நடப்பதால் அதற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், செய்முறைத் தேர்வுக்கு பொருத்தமான தளங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் தேர்வுகளை அந்தந்த கல்லூரிகள் நடத்த வேண்டும்.

ஆய்வக பாடத்திட்டத்தின் அடிப்படையில் புற மதீப்பீட்டு கேள்விகள் கேப்கப்படும்.

கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற மூல தளத்தை பயன்படுத்தி சோதனை நடத்தலாம்.

செய்முறைத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க ஏ4 தாள்களை பயன்படுத்த வேண்டும்.

தேர்வு எழுதி முடித்த பிறகு அந்த நகலை சம்பந்தப்பட் தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு நடத்துவோர் அந்த நகல்களை மண்டல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

செய்முறைத் தேர்வு நடக்கும் மையங்களுக்கு பறக்கும் படையினர் வந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டும்

இவ்வாறு 17 வழி காட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.