புதுப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட ‘தமிழ்ராக்கர்ஸ்’ நிர்வாகி கைது!!

சென்னை:

தமிழக திரைத்துறையினருக்கு திருட்டு விசிடி.க்கள் பெரும் தலைவலியாக இருந்து வந்தது. இதற்கு அடுத்த கட்டமாக திரைப்படம் வெளியான அன்றைய தினமே இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியிடும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதனால் திரைப்படங்களின் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தது. இது குறித்து திரைத்துறையினர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இச்செயலில் ‘தமிழ்ராக்கர்ஸ்’ இணைய தள நிர்வாகியான வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த கவுரிசங்கர் என்பவர் செயல்பட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனால் கவுரிசங்கர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் அவரை போலீசார் சென்னையில் இன்று கைது செய்தனர். மேலும், இணையதளங்களில் புதுப்படங்களை வெளியிடும் ‘தமிழ் கன்’ அட்மின்கள் 4 பேரும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: online releaser of new film tamil rockers admin arrested, புதுப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட ‘தமிழ்ராக்கர்ஸ்’ நிர்வாகி கைது
-=-