விரைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை

ன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

ரம்மி எனப்படும் சீட்டு விளையாட்டு ஆன்லைன் மூலம் சில நிறுவனங்கள் நடத்தி வருகிறது.  இதுவும் ஒருவகை சூதாட்டம் என்பதால் இதைத் தடை செய்யக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.  இந்த விளையாட்டினால் பெருமளவு பணத்தை இழந்த சிலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

ஆன்லைன் மூலம் நம்முடன் விளையாடுவது ஒரு வகை கணினி எனவும் அந்த கணினிக்கு நம்மிடம் உள்ள சீட்டுக்கள் தெரியும் எனவும் கூறப்படுகிறது.  எனவே ஆரம்பத்தில் விட்டுக் கொடுத்து வெற்றியை அளித்து பிறகு அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக அரசுக்கு இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யப் பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்டது.  அதன் அடிப்படையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “விரைவில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பணம் வைத்து விளையாடும் அனைத்து சூதாட்டங்களும் தடை செய்யப்படும்” என அறிவித்துள்ளார்.