சென்னை ஓபன் டென்னிஸ்: டிக்கெட்டுகள் நாளை முதல் விற்பனை

chennai-open-tennisசென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்காளுக்கான டிக்கெட் நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. சென்னையில், 22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4-ம் தேதி துவங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, போட்டி நடைபெறும் 7 நாள்களுக்கும் செல்லுபடியாகக் கூடிய சீசன் டிக்கெட்டுகளை, டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 10 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த டிக்கெட்டுகள் முதல் 8 நாள்களுக்கு விற்பனையில் இருக்கும். பாக்ஸ் ஆஃபிஸ் டிக்கெட்டுகள் டிசம்பர் 23-ஆம் தேதி முதல், போட்டி நடைபெறும் இடத்தில் விற்பனை செய்யப்படும். தினசரி போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை இணையதளம் மூலமாக 24 மணி நேரம் முன்பாகவோ, அல்லது போட்டி நடைபெறும் இடத்திலோ வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.