சென்னை

எச் டி எஃப் சி வங்கி ஆன்லைன் மூலம் நடக்கும் பரிவர்த்தனைக்கான கட்டணங்க்ளை ரத்து செய்து இலவசமாக்கி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பீட்டுக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின் பணமில்லா பரிவர்த்தனை எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாகின.   இந்த பரிவர்த்தனைக்கு வங்கிகளில் சில கட்டணங்கள் வசூலித்து வந்தன.   அவ்வாறு கட்டணம் வசூலித்த வங்கிகளில் தனியார் வங்கியான எச் டி எஃப் சி வங்கியும் ஒன்றாகும்.

வாடிக்கையாளர்கள் ரூ.2 முதல் 5 லட்சம் வரை ஆர்டிஜிஎஸ் எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதற்கு ரூ.25 கட்டணமும், ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.50ம் கட்டணமாக வசுலிக்கப்பட்டு வந்தது.   அத்துடன் என் இ எஃப் டி எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10000 வரை நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2.50,  ரூ.10000 – 1,00,000 வரை ரூ. 5, ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சம் வரை ரூ.15,  ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ.25 எனவும் கட்டணம் வ்சூலித்து வந்தது.

தற்போது அந்தக் கட்டணங்களை முழுவதுமாக வங்கி முழுவதுமாக ரத்து செய்துள்ளது.   இந்த ரத்து இந்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து அமுலுக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதே நேரத்தில் காசோலை மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.   காசோலை புத்தகங்கள் வழங்குகையில் ஒரு வருடத்துக்கு 25 காசோலைகள் இலவசம் எனவும், அதற்கு மேல் வழங்கப்படும் ஒவ்வொரு 25 காசோலைகள் கொண்ட புத்தகத்துக்கும் ரூ.75 கட்டணம் எனவும் அறிவித்துள்ளது.   கணக்கில் பணமில்லாமல் வாடிக்கையாளரால் அளிக்கப்பட்ட காசோலை எச் டி எஃப் சி வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டால் காசோலைகளுக்கு ரூ.500 அபராதம் அறிவிக்கபடும் எனவும் அறிவித்துள்ளது.    அதே போல வாடிக்கையாளரால் டிபாசிட் செய்யப்பட்டு பணமில்லாததால் திரும்பி வரும் காசோலைகளுக்கு ரூ.200 வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.