சென்னை:
மிழகத்தில் நடத்தப்படும் கொரோனா சோதனையில் 10% பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. இது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  சென்னை உள்பட மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி ஏராளமானோரு க்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இன்று புதிதாக 4,807 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 48,195பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,79,499 ஆக அதிகரித்துள்ளது என்றும், இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,907 பேர் ஆண்கள், 1,900 பேர் பெண்கள் என்றும் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில்  111 கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.
இந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களில் 10 சதவிகிதம் பேருக்குத்தான்  தொற்று உறுதியாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மொத்த 48,195பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.  அதுபோல பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும்  4,807  ஆக உள்ளது.
அதுபோல சென்னையிலும் இன்று , சென்னை மாநகராட்சி கூறியதுபோல, 13 ஆயிரம் பேருக்கு தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில்  1219 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இது மக்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.