தமிழகத்தில் 14% டாஸ்மாக் பார்கள் மட்டுமே சுகாதாரமானது: அதிர்ச்சி தகவல்

சென்னை:

டாஸ்மாக் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் மதுபான பார்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களில் 14 சதவிகித பார்கள் மட்டுமே உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்றுள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

மற்ற 86 சதவிகித பார்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெறாமல் சுகாதாரமற்ற உணவு பொருட்களை குடிகாரர்களுக்கு சப்ளை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கை  விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற , டாஸ்மாக் கடைகளை 2 மணிக்கு திறப்பது குறித்து அரசு விளக்கம் கோரிய நிலையில், மதுக்கடை பார்களில் உணவு தரமாக உள்ளதாக என ஆய்வு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பார்களில் விற்கப்படும் உணவு பொருட்கள் சினிமா தியேட்டர்களில் விற்பதை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், எம்ஆர்பி-ஐ விட அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  உரிமம் பெறாத டாஸ்மார்க் பார்களை மூட  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,   மதுக்கடை பார்களில் உணவு தரமாக உள்ளதாக என ஆய்வு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதியரசர் என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி வி.பார்த்திபன் ஆகியோரை கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.