புதுடெல்லி: அடுத்த 3 மாத காலக்கட்டத்தில், வெறும் 3% நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; இந்தியா முழுவதுமுள்ள 813 நிறுவனங்களில், ஆட்கள் சேர்ப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், நடப்பாண்டின் இறுதி காலாண்டில் வெறும் 3% நிறுவனங்கள் மட்டுமே மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஆட்களை பணியமர்த்த தீர்மானித்துள்ளன.

இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத நிலையாகும். அதேசமயம், 7% நிறுவனங்கள் ஊதிய உயர்வுக்கான வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளன. அதேசமயம், 3% நிறுவனங்கள் குறையும் என்ன்றும், 54% நிறுவனங்கள் ஊதிய விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறியுள்ளன.

இந்த ஆய்வில் தெரியவந்த முக்கிய அம்சம் என்னவெனில், ஆட்களைப் புதிதாக பணிக்கெடுப்பதில் சிறிய நிறுவனங்கள்தான் அதிக அக்கறை காட்டுகிறது என்று விஷயம்தான். ஆனால், இந்த எண்ணம் பெரிய நிறுவனங்களில் மிகவும் குறைவாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.