ட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்ம சக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, , உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத்தேடி, , அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட் டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட இருபத்தி ஐந்துக்கும் மேல் பிரமாண்டமன படங்களை தயாரித்துள்ளார் வி.சுவாமி நாதன். இவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். இது திரையுலலகினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அவரது உடல் சூளை மேட்டில் உள்ள (லயோலா கல்லூரி அருகில் ) தகன மேடையில் இறுதி சடங்கு நடந்தது. இதில் அவரது மகன்கள் மற்றும் மருமகன் மூன்று பேருக்கு மட்டுமே அரசு அனுமதியளித்தது.

பல படங்களில் ஆயிரக்கணக்கான துணை நடிகர், நடிகைகளுக்கு வேலை அளித்த தயாரிப்பாளரின் இறுதி சடங்கில் பங்கேற்க கொரோனா ஊரடங்கால் 3 பேர் மட்டுமே அரசு அனுமதி தநதிருந்தது. அதனால் அனைவரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு துக்கம் விசாரித்தும், ஆறுதல் கூறியும் வருகிறார்கள்.
நடிகர்கள் கமல்ஹாசன் , சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், உதயநிதி, சிலம்பரசன் , விமல், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், தம்பிராமையா, செந்தில், யோகிபாபு மற்றும் பல நடிகர்களும் தயாரிப்பாளர்கள்
எஸ்.தாணு, டி.சிவா, எடிட்டர் மோகன், கே.இ.ஞானவேல் ராஜா, சிவஸ்ரீ சீனிவாசன், கே.எஸ்.ஷிவா, எச்.முரளி, சித்ராலட்சுமணன் , எஸ்கேகே,கிருஷ்ண காந்த், மற்றும் பல தயரிப்பளர்கள்..
டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, விக்ரமன், கஸ்தூரி ராஜா, அகத்தியன், சுரேஷ்கிருஷ்ணா, செல்வ ராகவன், ஏ.வெங்கடேஷ், எஸ்.சரவணன், சுராஜ், பிரபுசாலமன், எழில், பொன்ராம் மற்றும் பல இயக்குனர்கள்..
ஒளிப்பதிவாளர் யூ,கே.செந்தில்குமார், ஜேபிஆர் காலேஜ் மரிய தீனா (Maria Teena)
மேலும் ஏராளமான தொழில்நுட்ப கலைஞர்கள் துக்கம் விசாரித்து வருகிறார்கள்.