திருவனந்தபுரம்

கேரளாவில் புது கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 34 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று  வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளா ஆகும்.

அதன் பிறகு இந்த மாநிலத்தில் பல கொரோனா பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி கேரள மாநில அரசு பல தடுப்பு நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுத்தது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500 ஆக உள்ளது.

கடந்த சில நாட்களாகக் கேரள மாநிலத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

இதுவரை மாநிலத்தில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டோரில் 462 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது வெறும் 34 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த தகவலைத் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக கேரளா மாறி விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.