ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் போன்று, இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் சந்திரசேகரராவ் கூறியதாவது, “கடந்த மாதம் போன்றே, ஏப்ரல் மாதமும், அரசு ஊழியர்களுக்கு 50% ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதேசமயம், பென்ஷன்தார்களுக்கு ஏப்ரல் மாதம் 75% ஊதியம் அளிக்கப்படும்.

ஆனால், மின்துறை ஊழியர்களுக்கு முழு மாத ஊதியம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு, அவர்களது ஊதியத்தில் 10% ஊக்கத்தொகையாக அளிக்கப்படும்.

தெலுங்கானாவில் மே மாதம் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மே 5ம் தேதி முடிவு செய்யப்படும்” என்றார் அவர்.