ம்மு காஷ்மீர்

சுமை நீதிமன்றம் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு 50000 பக்தர்களுக்கு மட்டுமே வர அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது.

வருடம் தோறும் வைஷ்ணவி தேவி ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   அதிக பக்தர்களி வருகையால் அந்த இடமே மாசு அடைகிறது.   சென்ற வருடம் அங்கு வந்த பக்தர்கள் மட்டும் அவர்கள் ஏறி வந்த குதிரை போன்ற வாகனங்களின் கழிவுகளும் நிறைய சேர்ந்து அந்த இடமே மிகவும் அசுத்தமானதுடன் அங்கு ஓடும் பனகங்கா நதியும் மாசுபட்டது.

இதையொட்டி பசுமை தீர்ப்பாயத்தின் கீழ் இயங்கும் பசுமை நீதிமன்றம் தற்போது ஒரு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.  அதில், “இந்த வருடம் முதல் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு 50000 பக்தர்களுக்கு மட்டுமே வர அனுமதி அளிக்கப்படும்.   அதற்கு மேல் வருபவர்கள் அர்தகுமாரி அல்லது காத்ரா பகுதியில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.   வரும் நவம்பர் 24ஆம் தேதி முதல் நடந்துச் செல்லும் பக்தர்களுக்கும் மின்சார கார்களுக்கு மட்டுமான பாதை ஒன்று திறக்கப்பட உள்ளது.    அனைத்து திட மற்றும் நீர்க்கழிவுகள் அனைத்தும்  நேரடியாக நதிகளில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.