அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்: செங்கோட்டையனின் ‘புளுகு’ அம்பலம

சென்னை:

டப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் பொய் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

தமிழக கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக கூறி வரும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அந்த மாற்றங்கள் எங்கு செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிவிப்பது இல்லை. அவர் அறிவித்துள்ள புதிய நடைமுறைகள் எதுவும் 90 சதவிகித பள்ளிகளில் இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

அதுபோல தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் நீட் போன்ற தேசிய பயிற்சிகளை எதிர்கொள்ள கடந்த கல்வி ஆண்டில்  412 நீட்  பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தாக கூறினார்.

மேலும், ‘தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளில் 1337 பேர்  நீட் தேர்வில் வெற்றி பெற்றதாகவும் இவர்களில் பலர்  மருத்துவம் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதை அப்போதே மருத்துவ கல்வி இயக்குனரகம் மறுத்திருந்தது. அரசு பள்ளி மாணவர்கள்  12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று  தெரிவித்தது ஆனால், தற்போது 7 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளதாக தகவல் உரிமை பெறும் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் உயர்படிப்புகள் படிக்க அகில இந்திய அளவில் நுழைவு தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவ மாணவிகள் நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருன்றனர். தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட அதிகமான அளவில் மருத்துவக்கல்லூரிகள் இருந்தும்,  மருத்துவ படிப்பிற்கான இடங்களை தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெற முடியாத சூழ்நிலையே நிலவி வருகிறது.

இதன் காரணமாக நீட் பயிற்சி மையம் ஏற்படுத்திய தமிழக கல்வித்துறை, அதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வந்தது. அதைத்தொடர்ந்து சுமார், 8,445 மாணவ மாணவிகள் சேர்ந்து படித்து நீட்  தேர்வு எழுதிய நிலையில், 1337 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

ஆனால், மருத்துவ படிப்பிற்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியான நிலையில், அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 12 பேருக்கு மட்டுமே அரசுக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்,  நடப்பாண்டில் 7 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்  என்பது ஆர்டிஐ தகவல்மூலம் தெரிய வந்துள்ளது மேலும், சிபிஎஸ்இ மாணவர்களே 894 இடங்களை கைப்பற்றி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

அத்துடன், , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.20 கோடியை பள்ளி கல்வித்துறை செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

ஆர்டிஐ மூலம் பெற்றப்பட்ட தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அமைச்சர் செங்கோட்டை யனின் பல்வேறு அறிவிப்புகள்… ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோலத்தான் இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.