ராஞ்சி:

தென்னாப்பிரிக்காவுடனான கடைசி போட்டியான 3-வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.  202ரன் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியுடன் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து இந்தியா வெற்றி பெற்று தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போத, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து ஆட்டத்தை  டிக்ளேர் செய்தது.

அதைத்த்தொடர்ந்து, இன்னிங்ஸ் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா கடந்த இரண்டு நாட்களாக ஆடி வந்தது.  இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 162 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

இந்திய பவுலர் முகமது ஷமியின் அபார பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், தென்ஆப்பிரிக்கா வீரர்கள் மளமளவௌ வெளியேறினர். 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறியது. நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின்போது தாக்குப்பிடித்து ஆடியா தென்னாப்பிரிகாக அணி வீரர் லிண்டே 27 ரன்களும், டேன் பீட் 23 ரன்களும் அடினர். நேற்றைய ஆட்டநேர முடிவில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்த நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் காலை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கடைசி இரு விக்கெட்டுகளும் விழுந்தன. இந்திய பவுலர் நதீமின் அபார பந்து வீச்சின் காரணமாக 9 நிமிடங்களில் 12 பந்துகளுக்கு  தென்னாப்பிரிக்கா விரர்  புரூயின்(30), நிகிடி(0) இருவரும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து,  தென் ஆப்பிரிக்க அணி 133 ரன்களில் சுருண்டது.  இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

ஏற்கனவே எ விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், புனேயில் நடந்த 2வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இன்றைய வெற்றியின் மூலம்  இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.