சென்னை:

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் வெறும் அறிவிப்புதான். வரும் ஜுலை மாதம் வழக்கமான பட்ஜெட் தாக்கல் செய்யும்போதுதான் நடைமுறை சாத்தியம் தெரியும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.


எப்போதும் இல்லாத அளவுக்கு ரயில்வேக்கு இந்த பட்ஜெட்டின் மூலம் ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் கட்டண உயர்வு ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டுக்கான நிதி மேலாண்மை 96.2 சதவீதமாக மேம்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் நிதி மேலாண்மையை 95 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்த மத்திய தற்காலிக நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதில் தனிநபர் வருமானம் 2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. வருமானவரி தொடர்பாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், இது வெறும் அறிவிப்புதான். ஜுலை தாக்கலாகும் வழக்கமான பட்ஜெட்டில்தான் நடைமுறை சாத்தியம் தெரியும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.