விருதுநகர்,

ண்டாள் சர்ச்சை காரணமாக மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கி உள்ள, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உண்ணாவிரதத்தின்போது,  உணவு தான் உண்ண கூடாது. ஆகாரம் எடுக்கலாம் என்று கூறி யுள்ளது  பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கடந்த மாதம் நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், ஆண்டாள் தேவதாசி என்று எழுதிவிட்டார் என்று சர்ச்சை கிளம்பியது.

வைரமுத்துவின் கருத்துக்கு  பாஜக  எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளபட ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து, வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார். இந்நிலையிலும் பல இடங்களில் வைரமுத்து மீது வழக்கு பதியப்பட்டும், அதற்கு கோர்ட்டு தடை விதித்திருப்பதும் நடந்துள்ளது.

இந்நிலையில், ஆண்டாள் குறித்து இழிவாகப் பேசிய வைரமுத்து மன்னிப்புக் கேட்கக்கோரி,  ஸ்ரீவில்லிபுத்தூர்  ராமானுஜ ஜீயர் கடந்த மாதம் 17ம் தேதி உண்ணாவிரத்தை மேற்கொண்டார்.

அவருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டார். அப்போது, வைரமுத்து மன்னிப்புக் கேட்க பிப்ரவரி 3ம் தேதி வரை காலக்கெடு விதிப்பதாகவும், அதற்குள் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறி யிருந்தார்.

ஆனால், வைரமுத்து இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.

ஆண்டாள் கோயிலில் வளாகத்தில் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார். அப்போது,  , ஆண்டாள் தாயார் கூறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனக்கூறினார். மேலும்,  உண்ணா விரதத்தின்போது, உணவு தான் உண்ண கூடாது. ஆகாரம் எடுக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

உண்ணாவிரதம் இருக்கும  ராமானுஜ ஜீயருடன் நேற்று ஒரு சில பக்தர்கள் இருந்த நிலையில், இன்று யாரும் இல்லாமல் தனந்தனியே உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.