முறையான ஓட்டுனர்கள் தான் பணி அமர்த்தப் பட்டுள்ளனர் : அமைச்சர் தகவல்

சென்னை

ட்டுனர் உரிமம் வைத்துள்ள முறையான ஓட்டுனர்கள் தான் தற்காலிக ஓட்டுனர்களாக பணி அமர்த்தப் பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் நேற்று நான்காம் நாளாக போக்குவரத்து தொழிலாளகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.   இன்றும் போராட்டம் நிகழும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.     நேற்று இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.  அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அமைச்சர், “ஊதிய உயர்வு குறித்து போராடுபவர்களுக்கு புரிதல் சரியாக இல்லை.    புதிய ஊதிய உயர்வு அடிப்படையில் ஊழியர்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.   இதுவரை 8 மாதங்களில் ரூ.,2,175 கோடி வழங்கப்பட்டுள்ளது.   ஊதிய உயர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கவும்  ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.350 கோடி வழங்கவும் அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

கடந்த 15 ஆண்டு காலமாக தொடரும் பிரச்னையை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வர எப்படி முடியும்.   இது வரை மொத்தம் 23 முறை பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம்.   ஊழியர்களை தவறாக நடத்தும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அவர்கள் மீது திணிக்கின்றனர்.

தமிழகம் முழுவது 80% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.   இந்த பேருந்துகளை முறையான ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளவர்கள் தான் இயக்கி வருகின்றனர்.  அவர்கள் பள்ளி வாகனங்கள், தனியார் பேருந்துகள் போன்ற வாகனங்களை இயக்கி அனுபவம் பெற்றவர்கள் ஆவார்கள்.” என தெரிவித்தார்.