ராணுவ கேன்டீன்களில் இனி இந்திய தயாரிப்புகள் மட்டுமே விற்பனை…

டெல்லி:

ந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே இனிமேல் துணை ராணுவ கேன்டீன்களில் விற்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினர், துணை ராணுவப்படையில் சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பயன்படும் வகையில்  ராணுவ கேன்டீன்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு  மளிகை பொருட்கள் உள்பட அனைத்து வகையான வீட்டு உபயோகப்படுபொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கேன்டீன்களில் இனிமேல்  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்த ராணுவ கேன்டீன்கள் மூலம் ஆண்டுதோறும் 2 ,800 கோடி அளவுக்கு விற்பனை நடந்து வந்த நிலையில், இங்கு. உள்நாட்டில் தயாரிப்பு பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து உள்ளார்.