குஷ்பு மட்டும்தான் உங்கள் முட்டாள் கருத்துகளை ரசிப்பார் : காயத்ரி ரகுராம்

‘Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், சுத்தியல் புகைப்படத்திற்கு , விக்னேஷ் பிரபாகர் என்பவரது காமெடி கருத்தால், உலகளவில் ட்ரெண்டானது #Pray_for_Neasamani.

சமூக வலைதளங்களில் அனைவருமே இந்த ஹேஷ்டேக்கில் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார் #Pray_For_Nesamani என்ற இந்த ட்ரெண்டிங்கும் தேவையற்றது. இதை நீங்கள் பிரதமர் மோடிக்கு எதிராகச் செய்வதாக நினைத்தீர்கள் என்றால் நாம் முட்டாள்கள் என்று தரம் தாழ்த்தும். உலக மக்கள் நமக்கு மூளை இல்லை என நினைப்பார்கள்.

வெற்றுக் கருத்துகள், ஹேஷ்டேக்குகள், மீம்கள் ஆகியவற்றுடன், தோற்பதற்காகவே காங்கிரஸ் ஏகப்பட்ட பணத்தைச் செலவுசெய்கிறது. இம்முறை இதே காரணத்துக்காகத்தான் தோற்றும் உள்ளது. குஷ்பு மட்டும்தான் உங்கள் முட்டாள் கருத்துகளை ரசிப்பார். முன்னேறிச் செல்லுங்கள். அவர் நிச்சயமாக இதை ரீட்வீட் செய்வார். எனக்கு உங்கள் விமர்சனங்களால் எந்தக் கவலையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி