அதிகத் தொகைக் கடன்களே வாராக் கடன்கள் ஆகின்றன : ஆய்வறிக்கை

டில்லி

அதிகத் தொகைகளில் அளிக்கப்படும் வங்கிக் கடன்களே வாராக்கடன்கள் ஆகின்றன என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன.    இதில் பொதுத்துறை வங்கிகளில் அதிக அளவில் வாராக்கடன்கள் உள்ளன.  சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி ஏழை எளிய மக்களின் பணத்த்ஹை வங்கிகள் எடுத்து பெரு முதலாளிகளுக்கு அளித்து விடுவதாக குற்றம் சாட்டி இருந்தார்.   கடன்கள் பற்றி ஆராய்ந்த ஒரு ஆய்வறிக்கையில் அதே கருத்து சொல்லப்பட்டுள்ளது.

வங்கிக் கடன்கள் பற்றி ஆராய்ந்த சுனில் மேத்தா குழுவின் அறிக்கையில், “வங்கிகளைப் பொறுத்த வரையில் குறைந்த கால கட்ட கடன்கள் அளிப்பதே சிறப்பானவை.    அத்துடன் கடன் அளிக்கப்படும் தொகையும் அதிகரிக்கக் கூடாது.    இதற்கு 3 வருடம் மட்டும் ரூ. 500 கோடி என நிர்ணயம் செய்யவேண்டும்.

பல நேரங்களில் மிகப் பெரிய திட்டங்களுக்காக அதிக தொகை பெறும் போது அந்த நிறுவனங்களால் கடனை குறித்த நேரத்தில் திருப்பித் தர முடியவில்லை.    அத்துடன் பல நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் சட்டங்களில் உள்ள ஓட்டைகளில் புகுந்து வெளி வர நன்கு தெரிந்துள்ளது.   அது மட்டுமின்றி நடப்பு மூலதனத்துக்கு கடன் வாங்கும் பல நிறுவனங்கள் அதை நேரடியாக தெரிவிக்காமல் புதிய திட்டக் கடன்கல் என வாங்குகின்றன.   அதனால் அவர்களால் அந்த திட்டங்களை நிறைவேற்ற முடியாததால் கடனை திருப்பித் தர முடியாமல் போகிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று உள்ளது.   இந்தக் கடன்கள் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்பவர்களின் பணத்தில் இருந்து அளிக்கப்படுகின்றன.    இத்தகைய வைப்பு நிதிகள் பொதுவாக மூன்று வருடங்களுக்கு மேல் முதலீடு செய்யப்படுவதில்லை.   அதனால் வங்கி அளிக்கும் கடன்களுக்கும் மூன்று வருடக் கெடு அளிக்க வேண்டும்.   அப்போதுதான் முதலீட்டாளர்களின் தொகைக்கு வங்கியால் முழு உத்திரவாதம் அளிக்க முடியும்.

வாராக்கடனகளைப் பொறுத்த வரையில் அதிக தொகையில் அளிக்கப்பட்ட கடன்களே பொதுவாக வாராக் கடன்கள் ஆகி விடுகின்றன.   இதற்கு நிறுவனங்கள் அளிக்கும் ஆவணங்களை வங்கி நிர்வாகம் நம்புவதும் ஒரு காரணம் ஆகும்.   இதனால் வங்கி தனக்கு ஈடாக அளிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு மற்றும் ஆவணங்களின் நம்பக்த்தன்மை குறித்து முழுமையாக ஆராயாமல் கடன்கள் அளிக்கக் கூடாது.   அத்துடன் ஒரு கடனை முடிக்காதவர்களுக்கு அடுத்த கடன் அளிக்கக் கூடாது என உறுதியுடன் இருக்க வேண்டும்” என குறிப்பிடப் பட்டுள்ளது.