மும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு

மும்பை

மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது,

இங்கு இதுவரை சுமார் 2.12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 9000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.

இதில் மும்பையில் மட்டும் சுமார் 86000 பேர் பாதிப்பு அடைந்து கிட்டத்தட்ட 4900க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

இங்கு மும்பை தாராவியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்தது.

இன்று தாராவி பகுதியில் முதல் முறையாக ஒரே ஒருவருக்கு மட்டும் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இத்துடன் தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2335 ஆகி உள்ளது.