“ஒரே ஒரு மனிதர் – கவர்னருக்காக – எத்தனை எத்தனை பேரின் உழைப்பு!!” : பி.கே.பி. வியப்பு

நெட்டிசன்:

a

பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் முகநூல் பதிவு:

“வெற்றிகரமான இரண்டு வரி காவியம் (திருக்குறள் தெளிவுரை) புத்தகத்தின் மாற்றங்களுடன் கூடிய புதிய பதிப்பை மேதகு கவர்னர் அவர்களிடம் கொடுத்து வாழ்த்து பெற்றேன்.”நல்லப் புத்தகம். ஆனால்..எனக்கு தமிழ் படிக்கத் தெரியாதே!” என்று தெலுங்கில் வருத்தப்பட்டார். கவர்னர் மாளிகைக்குள் நுழையும் முன் சந்திக்கும் துள்ளி ஓடும் மான்கள் மனதிற்கு இதம் சேர்க்கும். அங்கே வழங்கப்படும் மணக்கும் சூடான காஃபி உற்சாகம் தரும். ஒரே ஒரு மனிதருக்காக எத்தனை எத்தனை பேர் உழைக்கிறார்கள் என்கிற வியப்பான கேள்வியும் வரும்.”