பொருட்கள் வாங்கத் தனியாக ஒருவர் மட்டும் செல்லவும் : சுகாதார அதிகாரி வேண்டுகோள்

சென்னை

பொருட்கள் வாங்கத் தனியாக ஒருவர் மட்டும் செல்ல சுகாதார அதிகாரி பீலா ராஜேஷ் ஐ ஏ எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அரசு தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி உள்ளது. தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களை வெளியில் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களான பால், மளிகை, காய்கறி, மருந்து உள்ளிட்ட பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.  இந்த பொருட்கள் வாங்குவதாகக் கூறி பலர் கூட்டம் கூட்டமாக வெளியில் நடமாடி வருகின்றனர்

இதைத் தடுக்க சுகாதார அதிகாரி பீலா ராஜேஷ் ஐஏஎஸ் தனது டிவிட்டரில், “அத்தியாவசியப் பொருட்கள் வாங்க தனியாகச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  மிக அவசியமானால் ஒரு வயது வந்தோரும் ஒரு குழந்தையும் அனுமதிக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: corona, essential commodities, Health officer, National curfew, only one, Patrikaidotcom, tamil news, அத்தியாவசியபொருட்கள், ஒருவர் மட்டும், கொரோனா, சுகாதார அதிகாரி, தேசிய ஊரடங்கு
-=-