சென்னை:

மிழகஅரசு,  மத்திய பாஜகஅரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டே, நீட்  தேர்வை எதிர்ப்பதாக  கண்ணாமூச்சி ஆடி வருகிறது. தமிழக அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு எதிர் கொள்ளும் வகையில் தனியார் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து கோடிக்கணக்கில் செலவு செய்து ஸ்பெஷல் கோச்சிங்கும் கொடுத்து வருவதாக கூறி வருகிறது.

ஆனால், நடப்பு ஆண்டில் நடைபெற்று முடிந்துள்ள மருத்துவ கலந்தாய்வில், தமிழகத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளிகளில் படித்த மாணண மாணவிகளில் ஒரே ஒரு மாணவிக்கு மட்டுமே மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மாணவ மாணவிகளின் மருத்துவக் கனவை நீட் தேர்வு மூலம் மோடி அரசு கலைத்துவிட்ட நிலையில், மாநில அதிமுக அரசும், இந்த விஷயத்தில் கண்ணாமூச்சி ஆடி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகளும் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகை யில், நீட் கோச்சிங் அது இதுவென்று, ஏராளமான பணத்தைச் செலவழிப்பதாக கூறிக்கொள்ளும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், தமிழகத்தில் 418 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுப்பதாக கூறியிருந்தார். அதுபோல நீட் தேர்விலும் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தம்பட்டம் அடித்து வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு மாணவிதான் மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளது அம்பலமாகி உள்ளது.

ஆனால்,  மருத்துவப்படிப்புக்கான  அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் எத்தனை பேருக்கு இடம் கிடைத்து இருக்கின்றன என்ற பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட அரசு தயங்குவது ஏன்? என்று கல்வியாளர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தையும், தமிழக மக்களையும் எடப்பாடி அரசு திட்டமிட்டு ஏமாற்றி வருவதற்கு இதுவே சான்று….