சென்னை:
டைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஒரேஒரு ஓட்டு போட்டார் போதும். இதற்கான சட்டதிருத்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
வரும் அக்டோபர் மாதம் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலின்போது, போது, மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் பகுதி கவுன்சிலரை தேர்வு செய்ய ஒரு ஓட்டும், மேயரை தேர்வு செய்ய ஒரு ஓட்டும் என 2 ஓட்டுகள் போடும் முறை இருந்தது.
ஆனால், சமீபத்தில் செய்த சட்ட திருத்தம் மூலம் மேயரை கவுன்சிலர்களே தேர்ந்து எடுக்கப்படும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் வரும் உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு மட்டும் போட்டால் போதும். . எனவே இனி நகரசபை, பேரூராட்சி பகுதிகளில் வசிப்பவர்களும் ஒரே ஒரு ஓட்டு போட்டால் போதும்.
இதுபற்றிய நகராட்சி திருத்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் அமைச்சர் வேலுமணி.  அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மன்றங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதில் தலைவர்கள் மக்களால் வாக்களிக்கப்பட்டு நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். சில சூழ்நிலைகளில் தலைவர், மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பையும் அதுபோல மன்ற உறுப்பினர்கள் தலைவரின் ஒத்துழைப்பையும் பெறுவது இல்லை என்று தெரிய வந்துள்ளது.
தலைவர், மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை செய்வதற்காக தீர்மானங்கள் நிறை வேற்றுவதில் தடைகள் இருப்பதாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநகராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து மன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை மாநகராட்சி மேயராக தேர்ந்து எடுக்க, மன்ற உறுப்பினர்களை வாக்களிக்க செய்ய 2016-ம் ஆண்டு மாநகராட்சி சட்டங்கள் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.
அதன்படியே மாநிலத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒரே சீரான தேர்தல் நடை முறைகளை அமல்படுத்தும் பொருட்டு, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களையும் கூட மன்ற உறுப்பினர்களால் அவர்களுக்கு உள்ளேயே, அவர்களால் வாக்களித்து நேரடியாக தேர்ந்து எடுப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு தமிழக அரசு 1920-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தை பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வது என முடிவு செய்திருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
tamilnadu
இதன்படி ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் கூடும் முதல் கூட்டத்தில் ஒரு மன்ற உறுப்பினர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். அவர் தேர்வான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அவர் தலைவர் பதவி வகிக்க வேண்டும்.
அந்த சமயத்தில் அவரது மன்ற உறுப்பினர் பதவியும் இருக்கும். தலைவராக தேர்ந்து எடுக்கப்படுபவர் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவராக இருந்தாலோ அல்லது அவர் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டாலோ, அவர் தலைவர் பதவியில் இல்லை என்று அர்த்தம்.
இந்த சட்ட திருத்த மசோதா விரைவில் விவாதத்துக்கு எடுக்கப்படும். அதன் பிறகு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அமல் படுத்தப்படும்.
இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.
அதுபோல மாநகராட்சி தொடர்பான சட்டங்களை மேலும் திருத்தவும் ஒரு மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
ஏற்கனவே மேயர்களை நேரடியாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டு கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யும் முறையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.