கொரோனா படுத்தும்பாடு – ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்பாளர் மட்டுமே; பார்வையாளர் இல்லை..!

துபாய்: பஹ்ரைனில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா – 1 கார்ப் பந்தயப் போட்டியில், கொரோனா அச்சம் காரணமாக, பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதியென்றும், பார்வையாளர்களுக்கு அனுதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடாப் பகுதியில் ‍அமைந்த குட்டி நாடான பஹ்ரைனில், ‘ஃபார்முலா – 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ்’ என்ற பெயரிலான கார்ப் பந்தயப் போட்டி நடைபெறுகிறது.

ஆனால் கொரோனா பீதி காரணமாக, அப்போட்டியானது, பார்வையாளர்கள் யாருமின்றி, பங்கேற்பாளர்களை மட்டுமே கொண்டு நடத்தப்படும்.

அதேசமயம், அப்போட்டியைக் காண்பதற்கு டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் முழுத் தொக‍ையும் திருப்பி செலுத்தப்பட்டுவிடும். அது தொடர்பான மின்னஞ்சல் ஒவ்வொருவருக்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.