ஒரே நதிநீர் ஆணையம்: மத்தியஅரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

--

சென்னை,

நாடு முழுவதும் ஒரே நதிநீர் ஆணையம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து, ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

நாடு முழுதும் ஒரே நதிநீர் ஆணையம் என்ற அறிவிப்பு, காவிரியில் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்தும் செயல் என்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்காத கர்நாடகாவை கண்டிக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.