‘ரூ.58 லட்சம் மட்டுமே:’ இது யாரோட சொத்து மதிப்பு தெரியுமா?

டில்லி:

மீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சொத்து மதிப்பு வெறும் ரூ.58 லட்சம் ரூபாய் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சாதாரண கவுன்சிலர் கூட கோடிக்கணக்கான சொத்துக்களை குவித்து வருகின்றனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் ஒவ்வொரு வரும் சொத்து சுகங்களை குவித்து வரும் நிலையில், மறைந்த இநதிய பிரதமர் வாஜ்பாய்க்கு ரூ.58 லட்சம் அளவில்தான் சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

நாட்டில் 3 முறை பிரதமராக பதவி வகித்துள்ள வாஜ்பாய்,  பாரதியஜனதா கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பிரதமர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் அதீத ஈடுபாடு கொண்ட வாஜ்பாய், பிரதமராக இருந்தபோது,  பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து, அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்தவர்.

உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 16ந்தேதி மரணமடைந்த வாஜ்பாயின் சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, டில்லி கிழக்கு கைலாஷ் பகுதியில் எஸ்.பி.எஸ் அபார்ட்மெண்டில் வாஜ்பாய்க்கு சொந்தமாக ஒரு பிளாட் இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.22 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல, மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் வாஜ்பாயின்  பரம்பரை வீட்டின் மதிப்பு ரூ.6 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், டில்லி எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.3.82 லட்சமும்,  மற்றொரு கணக்கில் ரூ.25 லட்சம் உள்ளது. அத்துடன் சேமிப்பு பத்திரங்கள் ரூ.1.20 லட்சம் வைத்துள்ளார்.  ஒட்டுமொத்தமாக ரூ.58 லட்சம் வருகிறது.

இந்த சொத்து மதிப்பு கணக்கீடு கடந்த 2004ம் ஆண்டைய விவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி