லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில், திரையரங்கில் குறைந்தபட்சம் ஏழு நாட்கள், ஒரு நாளைக்கு 3 காட்சிகள் ஓடினால் மட்டுமே அந்தப் படம் ஆஸ்கர் போட்டிக்குத் தகுதி பெறும் என காலம் மாறிவிட்டது .

வணிக ரீதியாக ஸ்ட்ரீமிங்கிலோ, வீடியோ ஆன் டிமாண்ட் வகையிலோ வெளியான படங்கள், சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டியிடத் தகுதிபெறும் என தற்போது மாறியுள்ளது . அடுத்த வருடம் 93-வது ஆஸ்கர் விருது விழாவுக்கு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

அகாடமியின் தலைவர் டேவிட் ரூபின் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டான் ஹட்ஸன் இருவரும் இணைந்து இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய வரலாறு காணாத கோவிட்-19 நெருக்கடியால், தற்காலிக விதிவிலக்கை நமது விருதுகளுக்கான தகுதிக்கு விதிகளாக வைப்பது தேவையாயிருக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைத் தாண்டி, நியூயார்க் நகரம், பே ஏரியா, சிகாகோ, மியாமி, அட்லாண்டா உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகி ஓடும் படங்களையும் போட்டிக்குப் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒலிக் கலவை, ஒலித் தொகுப்பு என்ற இரண்டு விருதுப் பிரிவுகளை ஒன்றாக இணைப்பதாக அகாடமி அறிவித்துள்ளது. பிப்ரவரி 28, 2021 அன்று ஆஸ்கர் விழா நடைபெறவுள்ளது.