இரு கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் த்ரில்லர்
ராமநாதன் கே.பி., இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘வித்தையடி நானுனக்கு’. சமீபமாக தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் த்ரில்லர் பட வரிசையில் இதுவும் சேர்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படம் நினைவிருக்கிறதா.. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா…’ பாடல் ஏக பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர்தான் இப்போது ‘ராமநாதன் KB’ என பெயர் மாற்றிக் கொண்டு இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, படத்தின் இரண்டே கதாப்பாத்திரங்கள்தானாம். அதில் ஒருவர் இவர்தான். இன்னொருவர் சவுரா சையத் என்ற புதுமுகம்.
விவேக் நாராயண் இசையமைக்கிறார். ராஜேஷ் கடம்கோட் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தில் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் ‘பாயும் ஒளி நீ எனக்கு ‘எனத் தொடங்கும் அற்புதமான பாடல். இதற்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ளாராம் விவேக் நாராயண்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கொடைக்கானல் குளிர் ப்ளஸ் இருட்டில் படமாக்கப்பட்டிருக்கிறதாம்.
ஏகத்துக்கு மிரட்டறாங்களே..!