ரெண்டே ரெண்டு நிபந்தனைதான்! கே.பி.முனுசாமி பிடிவாதம்!

சென்னை:.

திமுகவின் இரு அணிகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பேச்சு வார்த்தை நடைபெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகி உள்ளது.

இன்று செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி கூறியதாவது,

 

ஜெ. மரணம் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்தப்பட வேண்டும், சசி குடும்பம் முற்றிலும் கட்சியில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகவும், முதலில் அவர்கள் குழு அமைத்ததாக தெரிவித்தனர். ஆனால்  தற்போது தான்தோன்றி தனமாக பேட்டி அளித்து வருகின்றனர் என்று மறைமுகமாக அமைச்சர் ஜெயக்குமாரை சாடினார்.

இவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றனர். எனவும் கேள்வி எழுப்பினார்.  அவர்கள் தான் முதலில் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நினைத்தோம் , ஆனால், அவர்களுக்குள் தெளிவு இல்லாமல் இருப்பது அவர்கள் அளித்துவரும் பேட்டியில் தெரிகிறது.

எங்களுடைய இரண்டு கோரிக்கையை ஏற்றால் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். இரண்டு நிபந்தனை தவிர வேறு எந்த நிபந்தனைகளையும் நாங்கள் வைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.