பருவமழை தொடங்கிய நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலை என்ன?

சென்னை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் ஏரிகளின் தண்ணீரின் இருப்பது என்ன, சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை இது தீர்க்குமா என்பது குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில்  எதிர்பார்தத அளவுக்கு மழை பெய்யாத நிலையில், தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கேரளாவின் தென்மேற்கு பருவமழை காலத்தின்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை குறித்து கூறியுள்ள சென்னை வானிலை மையம், தற்போது வரை தமிழக்ததில் சராசரி மழையை விட 70 மி.மீ கூடுதலாக பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதுபோல,  வடகிழக்கு பருவமழை  220 மி.மீ மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் கூறி உள்ளார்.

ஆனால், சென்னைக்கு  குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான  செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய ஏரிகள் வறண்டுபோனதால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இந்த ஆண்டு தலைவிரித்தாடியது. இந்த நிலையில், தற்போதுவரை பெய்துள்ள மழையால் ஏரிகளில் ஓரளவுக்கே தண்ணீர் தேங்கியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை முடிவதற்குள் இந்த ஏரிகள் அனைத்தும் முழு கொள்ளவை எட்டும் என நம்புவதாகவும் தெரிவித்து உள்ளனர். வானிலை மையம் பரவலாக கணித்துள்ளபடி  பருவமழை பெய்தால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  500 மிமீ மழை பெய்தால், நகரத்திற்கு தண்ணீர் வழங்கும் நான்கு நீர்த்தேக்கங்களும் 2015க்கு பிறகு, இந்த ஆண்டு  மீண்டும் முழு திறனை எட்டும் என்றும், செம்பரம்பாக்கம், பூண்டி, ரெட் ஹில்ஸ் மற்றும் சோளவரம் நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வந்துகொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அந்த தண்ணீரும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. கண்டலேருவில் இருந்து  ஒரு நாளைக்கு 700 கியூசெக்ஸ் அளவிலான தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், இந்த வருகை சீராக உள்ளது என்று தெரிவித்துள்ள அதிகாரிகள்,  பூண்டியில் இருந்து தண்ணீர் ரெட் ஹில்ஸ் (ஒரு நாளைக்கு 400 கியூசெக்) மற்றும் செம்பரம்பாக்கம் (316 கியூசெக்) நீர்த்தேக்கங்களுக்கு அனுப்பப்படுகிறது.

நேற்றைய (வெள்ளிக்கிழமை)  நிலவரப்படி நான்கு நீர்த்தேக்கங்களின் ஒருங்கிணைந்த சேமிப்பு 2,789mcft (மில்லியன் கன அடி) அல்லது 24.78% ஆக இருந்தது. இதற்கு மாறாக, கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று, ஒருங் கிணைந்த சேமிப்பு 1,402mcft, தோராயமாக 12.50%.. இத்துடன்  பூண்டி ஏரிக்கு  மழை நீரும், அம்மப்பள்ளி நீர்த் தேக்கத்தில் இருநிது  தண்ணீரும் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

கடந்த வாரம் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில்  நல்ல மழை பெய்தது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி ஏரிக்கு  அதிகபட்சமாக 1,170 கியூசெக்ஸ் தண்ணீர் வந்ததாகவும், இதனால் ஏரி  52% நிரம்பியது.

தற்போதைய நிலையில் பாதி அளவே நிரம்பி உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சராசரி மழை பெய்யும்போது, ​​நான்கு நீர்த்தேக்கங்களும் விரைவில் நிரம்பும் என்று  மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

சென்னை குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி. ஏரிகளில் போதுமான நீர் நிரம்பியிருக்கும் நிலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளொன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். சுமார் 11 மாதங்கள் தண்ணீர் வழங்கலாம்.

தற்போது மழை பெய்து வருவதால், நகரவாசிகளுக்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க மெட்ரோவாட்டர் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே, இது 10 நாட்களுக்கு முன்பு ஒரு நாளைக்கு 525 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) முதல் 650 எம்.எல்.டி வரை குழாய் விநியோகத்தை உயர்த்தியுள்ளது. அக்டோபர் 31 வரை, மெட்ரோவாட்டர் லாரிகள் நகரம் முழுவதும் 5,946 முறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது பெய்து வரும் தொடர்ச்சியான மழை, மழை நீர் சேகரிப்பு,  நிலத்தடி நீர் மட்டம் உயர்வு மற்றும் போர்வெல்கள் செயல்படுவதால், லாரிகளின் தண்ணீர் வழங்கும்  தேவை குறைந்து வருகிறது என்றும், இதனால் டேங்கர் மூலம் தண்ணீர் விநியோகத்தை குறைக்க நிறுவனம் திட்டமிட்டு வருவதாக மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.