அயோத்தியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்த உள்ளதாக வெளிவந்த தகவல் முற்றிலும் தவறு – ஆர்.எஸ்.எஸ்.
அயோத்தியில் முஸ்லீம்கள் ஒன்றிணைந்து தொழுகை நடத்தும் நிகழ்வு முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் பொய்யானது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அகில பாரதிய பிரச்சார் பிரமுக் அமைப்பை சேர்ந்த ஸ்ரீ அருண் குமார் டிவிட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்கள் பொய்யான தகவலை பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ராஷ்ட்ரிய முஸ்லீம் மச் அமைப்பின் தேசிய ஊடக தொடர்பாளரான ராஜா ரிஜ்வி, பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் போது
“ அயோத்தியில் 1500க்கும் மேற்பட்ட மதக்குருக்களும், இஸ்லாமிய அறிஞர்களும் ஒன்றிணைந்து குர்ஆன் ஓதும் நிகழ்வும், தொழுகையும் நடத்தப்படும். சர்யு நதிக்கரையில் ஓடும் தண்ணீரை பயன்படுத்தி அவர்கள் சுத்தம் செய்யப்பட்ட நிலையில் தொழுகையை நடத்த உள்ளனர். உலகில் அமைதி நிலைக்கவும், அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்கவும் வேண்டி தொழுகை நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ராஷ்ட்ரிய முஸ்லீம் மச் அமைப்பின் தலைவரான ஷபானா அஜ்மி கூறுகையில் “ ராஜா ரிஜ்வி கூறியது முற்றிலும் தவறு. அயோத்தியில் முஸ்லீம்கள் தங்கள் மத வழிபாடுகளை நடத்த அனுமதிக்கப்படுவது தவறான கருத்து ” என்று கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்த பதிவு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் என்பதை காட்டுகிறது. அயோத்தி இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பொதுவானது என்பதை விளக்கும் விதமாக இந்த தொழுகை நிகழ்வு நடத்த இருந்ததாக கூறப்படுகிறது.