‘சூர்யவன்ஷி’ மற்றும் ‘83’ – ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு….!

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது .

இதனால் திரையரங்குகள் மூடப்பட்டது எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

இதனால் பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்து வருகின்றனர். ஜூலை மாதத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 7 இந்திப் படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அக்‌ஷய்குமார் நடிப்பில் ‘சூர்யவன்ஷி’ மற்றும் ரன்வீர் சிங் நடிப்பில் ‘83’ ஆகிய இரு படங்களும் திரையரங்கில் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிவிஆர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரோஹித் ஷெட்டியின் ‘சூர்யவன்ஷி’ இந்த ஆண்டு தீபாவளிக்கும், கபீர்கானின் ‘83’ இந்த ஆண்டு க்றிஸ்துமஸ் பண்டிகைக்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.