முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உதகை ஆட்சியர் அறிவிப்பு

--

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு  சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத தனி நபர்கள், நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் நோயைப் பரப்பும் வகையில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறி உள்ளார்.