ஊட்டி மலர்க் கண்காட்சி 5 நாட்களாக நீட்டிப்பு… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

(பைல் படம்)

ஊட்டி:

கோடை விடுமுறையையொட்டி வழக்கமாக ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு 5 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு, தமிழக ஆளுநர் பங்கேற்க வசதியாக  5 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊட்டியில் இந்த ஆண்டு 122வது மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. மே மாதம் 18ந்தேதி தொடங்கும் இந்த கண்காட்சி 20ந்தேதி முடிவடையும். ஆனால், இந்த ஆண்டு 22ந்தேதி வரை நீடித்துள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மலர்க் கண்காட்சி  3 நாட்கள் மட்டுமே நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தமிழக ஆளுநர் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே மலர்க் காட்சியின் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் 2 நாட்கள் மலர்க் கண்காட்சி அதிகரிக்கப்பட்டி ருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.