ஊட்டி மலை ரயில் கட்டண உயர்வு: மத்திய ரயில்வே அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம்

நீலகிரி:

ட்டி மலை ரயில் கட்டணத்தை ரயில்வே அதிரடியாக உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா, மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற  பழமை வாய்ந்த மலைரயில் ,  மேட்டுப்பாளையம் – உதகை இடையே தினசரி இயக்கப்பட்டு வருகிறது.  . இந்த ரயில் பயணத்தின்போது, நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்கவும், இந்த ரயிலில் பயணிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த மலை ரயில் சேவையால் ரயில்வே நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், இதனை ஈடுகட்டும் வகையில் மலைரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் கடந்த ஜூலை மாதம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து,  மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு முதல் வகுப்பு கட்டணம் 195 ரூபாயில் இருந்து 470 ரூபாயாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 174 ரூபாயில் இருந்து 365 ரூபாயாகவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டாம் வகுப்பு கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன இந்த புதிய கட்ட உயர்வு நேற்று முதல் (அக்டோபர் 10ந்தேதி) அமலுக்கும் வந்துள்ளது.

இநத கட்டண உயர்வு பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா பயணிகள் திடீர் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  நீலகிரி மலைரயில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா மத்தியரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த கட்டண உயர்வால் சுற்றுலா வரும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என்று திருச்சி சிவா அதில்  கூறியுள்ளார்.