ஊட்டி குதிரைப்பந்தய மைதானம் கோத்தகிரிக்கு மாற்றப்படுகிறது

சென்னை

நூறாண்டு பழமை வாய்ந்த ஊட்டி குதிரைப்பந்தய மைதானம் விரைவில் கோத்தகிரிக்கு மாற்றப்பட உள்ளது.

சென்னை ரேஸ் கிளப் அமைத்துள்ள ஊட்டி குதிரைப்பந்தய மைதானம் சுமார் 54 ஏக்கர் பரப்பரள்வைக் கொண்டதாகும். இந்த மைதானத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்க மாவட்ட அரசு நிர்வாகம் 1.4 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த முன் வந்தது. இதை எதிர்த்த மைதான நிர்வாகம் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஒரு நீதிபதி அமர்வு விசரித்ட இந்த வழக்கில் மாவட்ட நிர்வாகம்  நிலம் கையகப்படுத்தத் தடை விதித்தது.

இதையொட்டி மாவட்ட நிர்வாகம் அளித்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள்  கிருபாகரன் மற்றும் அப்துல் குதவுஸ் ஆகியோரின் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றா அமர்வு மாவட்ட நிர்வாகத்திடம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானத்தின் 54 ஏக்கர் நிலத்தை முழுவதுமாக எடுத்துக் கொண்டு அதற்கு பதில் ஊட்டியின் புறநகர் பகுதியில் அதே அளவு நிலம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

நேற்று மாவட்ட ஆட்சியர் கோத்தகிரி தாலுக்காவில் உள்ள நெடுகுடா 2 என்னும் கிராமத்தில் 52 ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிவித்தார். இது குறித்து  சென்னை ரேஸ் கிளப் இந்த நிலத்தைச் சோதனை செய்து விட்டு முடிவு தெரிவிப்பதாகச் சொல்லி உள்ளது.  ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு மூன்று வாரத்தில் இந்த நிலம் ரேஸ் கிளப்புக்கு அளிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.